திருமங்கலம் அருகே 30ஆயிரம் வண்ண வளையல் அலங்காரத்தில் மின்னும் அம்மன் !

திருமங்கலம் அருகே 30 ஆயிரம் வளை யல்கள் கொண்டு அம்மனுக்கு விசேஷ அலங்காரம் – ஏராளமான பெண்கள் அம்மனிடம் அருள் பெற்றனர் – திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்க வேண்டியும்,குழந்தை பாக்கியம் வேண்டியும் பெண்கள் தரிசனம்.

        மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் திருக்கோயிலில் , ஆடிப்பூரத்  திருநாளை முன்னிட்டு ஸ்ரீ ரகுபதி கிருஷ்ண கொண்டம்மாள் சுவாமிகளுக்கு முப்பதாயிரம் வளையல்கள் கொண்டு , விசேஷ அலங்காரம் செய்ததுடன், வண்ண வண்ண மின்னொளியில் சுவாமியும், அம்மனும் ஜொலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
       இத்திரு நாளில் திருமணமான பெண்கள் மாங்கல்யம் நிலைக்க வேண்டியும்,  அம்மன் வளையல் அணிந்து தாய்மை கோலம் பூண்டுள்ள இத்திருநாளில் பெண்கள் வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை .  
         அதன் அடிப்படையில், ஆண்டு தோறும் இத்திருநாளை திருமணமான பெண்கள் விசேஷமாக வழிபடுவது தொடர் கதை ஆகி வருகிறது .  அது போல் இந்த ஆண்டு திருக்கோயிலில் மதுரை , திருமங்கலம் , டி. கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் ஒன்று கூடி அம்மனை வழிபட்டதுடன் ,  அம்மனிடம் இருந்து வளையங்களை பெற்றுக்கொண்டு அதனை வீடுகளில் வைத்து வழிபட எடுத்துச் சென்றனர்.

     இதனைத் தொடர்ந்து, திருக்கோயில் சார்பாக, தலைவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் ரமேஷ் உட்பட நிர்வாகிகள், அங்கு கூடிய அனைவருக்கும் வளைகாப்பு விருந்து உணவுகளை பரிமாறினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!