கேஎஸ் ரவிக்குமார்
உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி 1990ம் ஆண்டு புரியாத புதிர் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார்.
சேரன் பாண்டியன் படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்டவர் அடுத்தடுத்து புத்தம் புதுப்பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், சக்திவேல் என 3 ஆண்டுகளில் பல படங்கள் இயக்கினார்.
ஆனால் கேஎஸ் ரவிக்குமார் என்றாலே நமக்கு முதலில் முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்கள் தான் முதலில் நியாபகம் வரும்.

சொத்து மதிப்பு
கே.எஸ்.ரவிக்குமார் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சென்னையில் பல்வேறு இடங்களில் அவருக்கு பிரம்மாண்ட பங்களாக்கள் உள்ளன.
இரண்டே முக்கால் ஏக்கரில் கப்பல் போல வீடு உள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக அப்பவே கலக்கிவந்த கே.எஸ்.ரவிக்குமார் சொத்து மதிப்பு ஏகப்பட்டதாம். கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரூ. 70 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.