ராமராஜன்-நளினி
தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நளினி.
ஒரே வருடத்தில் இவர் நடித்த 24 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது, அந்த அளவிற்கு ஒரு காலத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்திருக்கிறார். அந்த நேரத்தில் நடிகர் ராமராஜனை காதலிக்க இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
1987ம் ஆண்டு படு கோலாகலமாக இவர்களது திருமணம் பிரபலங்கள் சூழ திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.
13 ஆண்டுகளில் இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

நளினி பேச்சு
இப்போது பிஸியாக சீரியல்களில் நடித்துவரும் நளினி ஒரு பேட்டியில் நடிகரும், தனது கணவருமான ராமராஜன் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், கணவராக ராமராஜனை மிகவும் பிடிக்கும், அவருடன் வாழ்ந்தது பொற்காலம். நான் இப்போது தும்ப போறேன்னா அது அவருக்கு தெரியும், அந்த அளவிற்கு பாசமாக இருப்பார்.
7 ஜென்மம் எடுத்தாலும் எனக்கு அவர் தான் கணவராக வர வேண்டும். அவருக்கு ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை உண்டு, குழந்தைகள் வளரும் போது அப்பா கூட இருக்காது என சொன்னதால் விவாகரத்து பெற்று பிரிந்தோம்.
விவாகரத்து வாங்கும்போது கூட என் கணவர் என் கையை பிடிச்சிட்டு தான் இருந்தார் என ராமராஜன் குறித்து பேசியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.