நடிகை அஞ்சலிக்கு நான்கு முறை திருமணம் ஆகிவிட்டதா! அவரே கூறியுள்ளார் பாருங்க

அஞ்சலி

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அஞ்சலியின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வந்துள்ளது. நடிகை ஜெய்யுடன் அவர் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

நடிகை அஞ்சலிக்கு நான்கு முறை திருமணம் ஆகிவிட்டதா! அவரே கூறியுள்ளார் பாருங்க | Anjali About Her Marriage Controversy

பிறகு அவரை பிரிந்துவிட்டதாகவும், தெலுங்கு திரையுலகில் உள்ள ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் ஒன்று பரவியது. இதற்கு நடிகை அஞ்சலி ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமண சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை பேச்சு

இதில் “எனக்கு இதுவரை நான்கு முறை சமூக வலைத்தளங்களில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக முன்பு வதந்திகள் வரும்போது எனது வீட்டில் ரொம்பவே கவலைப்பட்டார்கள். ஆனால், இப்பொது அதற்கெல்லாம் அவர்கள் பழகிவிட்டனர்.

நடிகை அஞ்சலிக்கு நான்கு முறை திருமணம் ஆகிவிட்டதா! அவரே கூறியுள்ளார் பாருங்க | Anjali About Her Marriage Controversy

இந்த வதந்திகள் எல்லாம் வந்த பிறகு, உண்மையாகவே ஒருவரை நான் திருமணம் செய்துகொண்டு எனது வீட்டார் முன் போய் நின்றால்கூட அவர்கள் அதனை நம்ப மாட்டார்கள். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சினிமாவில் தான் இப்போது பிஸி” என அஞ்சலி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!