அட்லீக்கு அடித்த ஜாக்பாட் – இந்திய சினிமாவில் யாரும் வாங்காத சம்பளம் கொடுக்க முன்வரும் தயாரிப்பு குழு

இயக்குனர் அட்லீ

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து இப்போது இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் இவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள் என்றால் அது அட்லீ தான்.

ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தொடங்கிய அவரது பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறார்.

விஜய்யை வைத்து ஹிட் படங்கள் கொடுத்து சாதித்த அட்லீக்கு பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைக்க ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

படமும் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்திய சினிமாவில் யாரும் வாங்காத சம்பளம் கொடுக்க முன்வரும் தயாரிப்பு குழு- அட்லீக்கு அடித்த ஜாக்பாட் | Director Atlee Kumar Next Movie Salary Details

அடுத்த படம்

இந்த நிலையில் அட்லீயின் புதிய படம் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை அட்லீ இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்காக அட்லீக்கு மிகப்பெரிய தொகை அதாவது இந்திய திரை உலகில் யாரும் வாங்காத சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களில் தயாரிப்பு நிறுவனம் அட்லீ படம் குறித்து தகவல் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்திய சினிமாவில் யாரும் வாங்காத சம்பளம் கொடுக்க முன்வரும் தயாரிப்பு குழு- அட்லீக்கு அடித்த ஜாக்பாட் | Director Atlee Kumar Next Movie Salary Details

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!