அமரன்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.
இப்படம் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக அமைந்துள்ளது. இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது . ஓராண்டாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரிலீஸ் தேதி
இந்நிலையில் அமரன் படத்தை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே மாதத்தில் விஜய்யின் கோட் திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.