
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர் விடுதியில் குடிநீர் தொட்டி வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்: கோ.புதூரில் உள்ள அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடிநீர் தொட்டி தேவை என்று நமது கவனத்திற்கு வந்த நிலையில் எனது தனிப்பட்ட சேமிப்பில் வாங்கப்பட்டு நண்பர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது என்றார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ்குமார், சசிகுமார், பிரபு மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் களப்பணியில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.
விடுதியின் நிர்வாகி கோபி அங்கு தங்கியுள்ள பார்வையற்றோரின் தனிப்பட்ட திறமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

தங்கள் தேவையை அறிந்து உதவிய வழிகாட்டி மணிகண்டன் மற்றும் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்களுக்கு அங்கு தங்கியுள்ள அனைவர் சார்பில் கார்த்திக் நன்றி கூறி பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.