விக்கிரமங்கலத்தில் மழை காற்றுக்கு அறுந்து விழுந்த மின் வயரை மிதித்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து சாவு

சோழவந்தான்,ஜூன்.2-

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மதியரசன் வயது 44.இவர் இன்று காலை இவரது தோட்டத்தை பார்க்க சென்ற பொழுது நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு இவர் தோட்டத்து வழியாக சென்ற மின்சாரவயர் அறுந்து கிடந்துள்ளது. இதை மதியரசன் பார்க்காமல் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்து விட்டார். இவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மதியரசன் இறந்துவிட்டார். இது குறித்து விக்கிரமங்கள் சப் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!