தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு எழுதிய கதை இல்லை.. உண்மையை கூறிய மோகன் ராஜா

தனி ஒருவன்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி 2015ஆம் ஆண்டு வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம். இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு எழுதிய கதை இல்லை.. உண்மையை கூறிய மோகன் ராஜா | First Choice Hero For Thani Oruvan Movie

அதற்கான அறிவிப்பும் மோகன் ராஜாவிடம் இருந்து வெளிவந்தது. ஆனால், படப்பிடிப்பு துவங்கவில்லை. பட்ஜெட் பெரிதாக இருக்கும் காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவரா

இந்த நிலையில், தனி ஒருவன் திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லை என இயக்குனர் மோகன் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு எழுதிய கதை இல்லை.. உண்மையை கூறிய மோகன் ராஜா | First Choice Hero For Thani Oruvan Movie

இதில் இப்படம் முதன் முதலில் எழுதப்பட்டது பிரபாஸுக்காக தான். ஆனால், அந்த சமயத்தில் அவர் காதல் கதைக்களத்தில் நடிக்க தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் அவரை வைத்து தனி ஒருவன் திரைப்படத்தை இயக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து படத்தை எடுத்ததாக மோகன் ராஜா கூறியுள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!