காதல் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை..! யார் தெரியுமா

தனுஷ் 

தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஜூலை மாதம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் தான் குபேரா. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை..! யார் தெரியுமா | Dhanush To Join Hands Wth Kiara Advani First Time

இப்படத்தை முடித்த கையோடு தனுஷ் இந்தியில் உருவாகவுள்ள திரைப்படம் Tere Ishk Mein. இப்படத்தை தனுஷின் ஆஸ்தான இயக்கினர்களில் ஒருவரான ஆனந்த் எல். ராய் இயக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அம்பிகாபதி மற்றும் அத்ராங்கி ரே ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளது

முதல் முறையாக இணையும் ஜோடி

மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்து Tere Ishk Mein திரைப்படம் காதல் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம். மேலும் இதில் விமான படை குறித்தும் பேசப்படும் என கூறப்படுகிறது.

காதல் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை..! யார் தெரியுமா | Dhanush To Join Hands Wth Kiara Advani First Time

இந்த நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளாராம். கிட்டதட்ட இப்படத்தில் கியாரா அத்வானி நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!