சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு!

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு!

போலீசார் வீடியோ படங்களை காட்டி சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் செஞ்சி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் சைபர் கிரைம் எனப்படும் இணைய வழி குற்றங்கள் குறித்து அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார்.

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும், வீடியோ காட்சிகள் மூலமும் ஆன்லைன் மோசடி, விளையாட்டுகள், சமூக வலைதள குற்றங்கள், போலியான ஆப் கள், கடன் மோசடிகள் குறித்து விளக்கி பிரசாரம் செய்தனர். சைபர் கிரைம் குற்றங்கள் நிகழும் போது போலீஸ் உதவி எண் 1930 தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!