பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வரும்  ஜூலையில் ரிலீஸ்! 

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார்.

இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசரில் அருண்விஜய் ஒரு கையில் பெரியார் சிலையும், மறு கையில் பிள்ளையார் சிலையும் வைத்திருக்கும் காட்சி கவனம் பெற்றது.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இருப்பினும் தேதி குறித்து அவர் குறிப்பிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!