
தாயுடன் நடந்து சென்ற பள்ளி சிறுமியை முட்டி தூக்கி வீசிய மாடு -பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்
யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சிறுமி ஆயிஷாவை தன் கொம்புகளால் தூக்கி கீழே வீசி தரையில் போட்டு தொடர்ந்து கொடூரமாக தாக்கியது
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை பசு மாடு கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு, இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது ஆண் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு பசு மாடுகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சிறுமி ஆயிஷாவை தன் கொம்புகளால் தூக்கி கீழே வீசி தரையில் போட்டு தொடர்ந்து தாக்கியது. இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் மாட்டை துரத்த முற்பட்டனர், ஆனால் எதற்கும் அசராத மாடு தொடர்ந்து சிறுமியை தரையில் முட்டி தள்ளியது. ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் அந்த பசுமாட்டினை விரட்டியடித்து சிறுமி ஆயிஷாவை காப்பாற்றினர்.
மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த சிறுமி ஆயிஷாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் சேர்த்தனர், சிறுமிக்கு தலையில் நான்கு தையல்கள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.