திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை மறுநாள் நடக்கிறது

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் 191-வது அவதார தின விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு நடக்கிறது. காலை 6 மணிக்கு அன்னதர்மமும், பகல் 12 மணிக்கு உச்சபடிப்பு, பணிவிடையும், தொடர்ந்து ஒரு மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. மாலை 7 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.191-வது அவதார தினமான நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடக்கிறது. பின்னர் காலை 6.36 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடை நடக்கிறது. பின்னர் அன்னதர்மம் நடக்கிற

து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!