திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா இன்று காலை 8:45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆதாரதனைகள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் புனிநீர் கொண்டு அபிஷேகம் செய்த அருகம்புல் மா இலை, சந்தனம் குங்குமம், பூமாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

கார்த்திகை தீப திருவிழாவினை ஒட்டி, சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் சுவாமி காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். -போட்டோ கார்த்தி – TPK

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!