பிஸ்கட்டுகளால் உருவாக்கப்பட்ட ராமர் கோயில் – வைரல் வீடியோ!

பிஸ்கட்டுகளால் உருவாக்கப்பட்ட ராமர் கோயில் – வைரல் வீடியோ!

நாடெங்கிலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதைப் போன்று கொண்டாட்டமான சூழல் காணப்படுகின்றது. காரணம் வருகின்ற 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட இருக்கிறது என்பதுதான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.

108 அடி நீளத்திற்கு உருவாக்கப்பட்ட ஊதுபத்தி, 2,100 கிலோ எடை கொண்ட மணி என்று இந்த கோவில் திறப்பு விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஒவ்வொன்றுமே தனிச்சிறப்புகளை கொண்டதாக இருக்கின்றன. இதற்கிடையே, பக்தர்களும் தங்கள் பங்கிற்கு ராமர் கோவிலை சிறப்பிக்கும் விதமாக தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் பகுதியைச் சேர்ந்த சோதான் கோஷ் என்ற நபர், பார்லே ஜி பிஸ்கட்டுகளைக் கொண்டு 4க்கு 4 டி என்ற அளவில் ராமர் கோவில் மாடலை உருவாக்கி அனைவரையும் அசத்தியுள்ளார். சுமார் 20 கிலோ பிஸ்கட்டுகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. சோதான் கோஷ் மற்றும் அவரது நண்பர்களின் கூட்டு முயற்சியில் சுமார் 5 நாட்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தெர்மாகோல், பிளைவுட், குளூகன் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை பயன்படுத்தி ராமர் கோவில் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் தயாரிப்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவின் கீழே ராம நாமத்தை கமெண்டுகளாக பதிவு செய்து பக்தர்கள் தங்கள் பக்தியையும், பாராட்டுக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.




நாட்டின் பெருமை, பாரம்பரியம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் மாடல்களை உருவாக்கும் நடவடிக்கையை இதற்கு முன்பும் பலமுறை சோதான் கோஷ் மேற்கொண்டிருக்கிறார். சந்திராயண் – 3 விண்கலத்தை இஸ்ரோ அமைப்பு நிலவுக்கு அனுப்பி வைத்தபோதும், அதன் மாடல் ஒன்றை இவர் உருவாக்கினார்.

அதிலும், அசையாத மாடலாக அதை அவர் உருவாக்கவில்லை. அந்த மாடலின் உள்ளே ராக்கெட் ஒன்றை அவர் பொருத்தியிருந்த நிலையில், அது வானில் சுமார் 30 அடி உயரம் வரை பாய்ந்து சென்றது.

திறப்பு விழா காணும் ராமர் கோவில் :

சுமார் 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா, வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு, அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள விடுதிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே நிரம்பி வருகின்றன.

பக்தர்களின் வசதிக்காக டெல்லி, அஹமதாபாத் போன்ற இடங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ரயில் தொடர்பு வசதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து பேருந்து வசதிகள் போன்றவை செய்யப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!