
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தமிழக அரசு சார்பில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த அன்னதான திட்டத்தில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உணவருந்தி வருகிறார்கள். தற்போது செயல்பட்டு வரும் அன்னதான மண்டபத்தில் 250க்கும் குறைவானவர்களே, ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையில்தான் இருந்து வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உணவருந்த விரும்பும் நிலையில், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், அன்னதான கூடத்தின் முன், நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாத காரணத்தினால், பொறுமையிழந்து அவர்களது டோக்கனை கிழித்தெறிந்துவிட்டு, சென்று விடுகின்றனர். கோவில் அதிகாரிகளோ, டோக்கன் வழங்கப்பட்ட பக்தர்கள் அனைவரும் சாப்பிட்டதாக கணக்கு காட்டுகின்றனர். காலையில் 9:00 மணிக்கு வழங்கப்பட்ட டோக்கனை வைத்து ஒரு மணிக்கு சாப்பிடும் அவலம் அரங்கேறி வருகிறது. உண்மையில் டோக்கன் வாங்குபவரில் கால் வாசிகள் சாப்பிடுவது இல்லை.
அன்னதானத் திட்டம் துவங்கியபோது, தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாப்பிட வருகின்றனர். அவர்களுக்கு உரிய இடவசதி இல்லாததால், நீண்ட நேரம் வரை வரிசையில் காத்திருந்து, வெறுத்துப் போய் சாப்பிடாமல் சென்று விடுகின்றோம்.

நாங்கள் மதியம் ஒரு மணிக்கு சாப்பிட சென்ற போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான கூட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் அப்போது எங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் காலை 9 மணிக்கு அச்சிடப்பட்டதாக உள்ளது.

இதில் ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா என்பதனை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் தலையிட்டு அன்னதானம் சாப்பிடுவதற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கூடுதல் இட வசதி மற்றும் வரிசையில் காத்திருப்போருக்கு தண்ணீர் வசதி மற்றும் மின்விசிறிகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.