கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகப்போகும் நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… பிறந்தநாள் ஸ்பெஷல்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டடித்த படம் கில்லி.

தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா ஜோடியாக நடிக்க வெளியான இப்படத்திற்கு வித்யாசாகர் தான் இசை.

கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் ரூ. 8 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது, ஆனால் ரிலீஸ் ஆகி படம் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

அதிலும் ரூ. 50 கோடி வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அண்மையில் ரீ-ரிலீஸ் ஆன இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவிலும் கொண்டாடினார்கள், வசூலும் அமோகமாக நடந்தது.

கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகப்போகும் நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்... பிறந்தநாள் ஸ்பெஷல் | Vijay Hit Film Gonna Re Release After Ghilli

பிறந்தநாள் ஸ்பெஷல்

மே மாதம் அஜித் ஸ்பெஷல் ஜுன் மாதம் வந்தால் விஜய் ஸ்பெஷல் தானே வேறு என்ன.

விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜுன் 22 இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது மக்களுக்கு அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.

அதுஎன்னவென்றால் வரும் ஜுன் 21ம் தேதி விஜய்யின் நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த துப்பாக்கி படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாம். இந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகப்போகும் நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்... பிறந்தநாள் ஸ்பெஷல் | Vijay Hit Film Gonna Re Release After Ghilli

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!