வாகன ஓட்டிகளே உஷார்.. இந்த போர்டை பார்த்தால் வண்டியை நிறுத்தாம ஓட்டுங்க.. மத்திய அரசு எச்சரிக்கை.!

நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த வகுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும்போது எடுக்கப்படுகின்றது.

சாலை விதிகளை ஓட்டுனர்கள் முழுவதுமாக தெரிந்திருந்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக நெடுஞ்சாலையில் பயணிக்கும் நபர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில அரசின் கீழ் இயங்கும் மாநில நெடுஞ்சாலைகள் சமீபத்தில் அதிக அளவில் விபத்துக்கள் பதிவாகி வருகிறது. இதனால் மத்திய அரசு நெடுஞ்சாலை போக்குவரத்து குறித்து முக்கிய விழிப்புணர்வு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் நீல நிறத்தில் இந்த போர்டு வைக்கப்பட்டு அதில் வெள்ளை நிறத்தில் அம்பு இருக்கும் compulsory ahead குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அம்புக்குறி உள்ள பலகை உள்ள சாலையில் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் செல்ல வேண்டும்.எந்த ஒரு காரணத்திற்காகவும் வாகனத்தை இடையில் நிறுத்தக்கூடாது.

சாலையின் நடுவில் வளைக்கவும் திரும்பவும் முயற்சிக்கக் கூடாது. இந்த சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் மிக வேகமாக செல்லும் என்பதால் நடுவில் நிறுத்தும் போது பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதையும் மீறி வாகனத்தை இந்த அம்புக்குறி பலகை உள்ள சாலையில் நிறுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!