அடடா.! இந்தக் காலத்தில் இப்படி ஒரு அரசு பள்ளி ஆசிரியரா..? ஆச்சரியப்படும் பெற்றோர்கள்.

தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கும் சூழலில், இவர் பணிபுரியும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் அக்கல்வி கற்க முடியாமல் இருப்பதை எண்ணி மனம் வருந்தியதால், அவர்களுக்கும் கல்வி முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதாக மாணவர்களுக்கு அரசின் கல்வித் தொலைகாட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்கள், பல வீடுகளில் ஏழ்மையின் காரணமாக டிவிக்களுக்கு பணம் கட்டமாலும், பல வீடுகளில் டிவி இன்றியும், பெற்றோர்கள் விவசாயப் பணிகளுக்கு சென்று விடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவதை போக்க ஆசிரியர் ஸ்ரீனிவாசன் கடந்த சில மாதங்களாக தனது சொந்த செலவில் நடமாடும் ஸ்மார்ட் டிவி மூலம் மாணவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று பாடங்களை நடத்தி வருகிறார். இந்த ஆசிரியர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் சீர்காழியை அடுத்த நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இதற்காக ஆசிரியர் ஸ்ரீனிவாசன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்றையும், அதனுடன் ஸ்பீக்கர், இணையவசதி மோடம், பென்டிரைவ் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாங்கி மூன்று சக்கர சைக்கிளில் பொருத்தி கிராமத்தில் உள்ளே எடுத்து சென்று பல்வேறு இடங்களில் வைத்து மாணவர்களை ஒன்றிணைத்து ஸ்மார்ட் டிவியில் கல்வி தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்து மாணவர்களை பார்க்க வைத்தது, அதில் ஏற்படும் சந்தேகங்களை நேரடியாக தீர்த்து பாடம் நடத்தி வருகிறார்.

இதனை கண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி கற்க முடியாமல் உள்ள சூழலில் இந்த ஆசிரியரின் செயல் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து ஆசிரியர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நேரடித்தொடர்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, கல்வித் தொலைக்காட்சியை அனைத்து மாணவர்களை அவசியம் பார்க்க வைக்க வேண்டும். மேலும் அதில் உள்ள பாடம் சார்ந்த சந்தேகங்களை தீர்க்க வேண்டும், என்ற எண்ணத்தில், நானும், சக ஆசிரியர்களும் சேர்ந்து இதனைச்செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

இந்த காலத்தில் இப்படியும் ஒரு அரசு பள்ளி ஆசிரியரா?என ஆச்சரியத்துடன் பெற்றோர்கள் அந்த ஆசிரியருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஆசிரியர் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது சக ஆசிரியர்களுக்கு நமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Advertising

Leave a Reply

error: Content is protected !!