கப்பலில் தீ விபத்து… 3 நாட்களாக போராடும் தீயணைப்புப்படையினர்

ஸ்பெயின் நாட்டில் உள்ள டரகோனா பலேரிக் கடலில் “எல்பீக்” எனும் சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

கப்பலில் முக்கிய பங்கு வகிக்கும் பிரிட்ஜ் டெக் எனும் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கப்பலில் உள்ள பணியாளர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஸ்பெயின் கடற்படைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தீயணைப்புப்படையுடன் கப்பலுக்கு ஸ்பெயின் கடற்படை விரைந்தது.

இதையடுத்து தீயணைப்புப்படையினர் கப்பலில் ஏறி தண்ணீர் பீரங்கிகளுடன் சென்று தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 6 தேதி ஏற்பட்ட இந்த தீ விபத்து, இன்று வரையும் தீயணைப்பு பணிகள் தீவரமாக நடந்து கொண்டிருக்கிறது.கப்பலில் இருந்து படகு மூலம் 18 பணியாளர்கள் மீட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்து ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்வதற்கு ஸ்பெயின் போலிஸார் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Fire on the ship … Firefighters fighting for 3 days

Understood fire extinguished, ship suffered heavy damages, probably a loss.

Fire erupted in superstructure of livestock carrier ELBEIK, anchored off Tarragona, Spain, Balearic sea, in the afternoon Aug 6. Fire reportedly, started in compartment or cabin on a deck below bridge deck, and quickly spread around. 18 crew were evacuated by Spanish SAR boat Fomalhaut. Fire team boarded the ship, tugs with water cannons were deployed. As of 1700 UTC Aug 6 firefighting was still ongoing, latest report hinted at bridge being also engulfed by flames. Ship’s AIS off during last 5 hours. There’s no cattle on board, the ship was waiting for cattle loading.

JOIN SEAMAN RIGHTS ORGANIZATION

Leave a Reply

error: Content is protected !!