
தூத்துக்குடி அருகே கீழ்த்தட்டப்பாறை கிராமத்தில் உள்ள ஆயிரம் கண்ணம்மாள் கோவில் கொடை விழா கடந்த 16-ந் தேதி செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு நையாண்டி மேள வாத்தியம் முழங்க தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்வும் குடி அழைப்பு நிகழ்வும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இன்று காலை விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து ஆயிரம் கண்ணம்மாள், உச்சிமாகாளியம்மன் மற்றும் சந்தனமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் அம்மனுக்கு அபிசேகம் தீபாராதனை முடிந்து உச்சிகால பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

பின்னர் கோயில் வாசல் முன்பாக நடைபெற்ற அன்னதான விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அறுசுவை உணவருந்தி சென்றனர். மேலும் விழாவிற்காக ஏற்பாட்டினை விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.