
கத்தார் நாட்டில் பாலம் விபத்தில் உயிரிழந்த மதுரை திருநகரை சேர்ந்த இளம் தம்பதியின் உடல் 5நாட்களுக்கு மேல் ஆகியும் கொண்டுவரப்படாததால் உறவினர்கள் கவலை; முதல்வர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் தோகா என்னும் இடத்தில் கேரளாவை சேர்ந்த ரோசின் ஜான் (வயது 38), இவரது மனைவி ஆனி கோம்ஸ், (வயது 30), ஆனி சகோதார் ஜி ஜோ கோம்ஸ் (வயது 34), இவர்களது நண்பர்கள் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சங்கர் (வயது 38),
இவரது மனைவி நாகலெட்சுமி சந்திரசேகர் (வயது 33) இவர்கள் அனைவரும் கடந்த வாரம் தோஹாவில் காரில் பயணம் செய்த போது. கார் பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்த விபத்தில் 5 பேரும் ஸ்மாபவ இடத்தில் பலியாகினர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் வசிக்கும் பிரவீன் சங்கர் மற்றும் இவரது மனைவி நாகலட்சுமி சந்திரசேகர் இருவரும் உயிரிழந்த நிலையில் இவர்களது உடல் ஒரு வாரம் ஆகியும் இந்தியா கொண்டுவரப்படவில்லை. இதனால் உறவினர்கள் மிகவும் கவலையுடன் உள்ளனர். இது தொடர்பாக முதல்வர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கத்தார் நாட்டில் தோகா பகுதியில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த இருபது உடல் விரைவில் இந்தியா வர தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.