
வெயில் காலத்தில் வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஃபிரிட்ஜை திறந்து ஜில்லுனு எதாவது குடிச்சா தான் பெருமூச்சே விடுவோம். அது மாதிரி விட்டை விட்டு எங்கயாச்சும் வெளில போனோம் என்றால் கடைகளில் வாங்கி குடிப்பது வழக்கம் அப்படி நம்ம ராஜபாளையம் பக்கத்துல ஒரு தனியார் சிற்றுண்டி கடையில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியுள்ளார். அப்போது அந்த குளிர்பான பாட்டிலுக்கென நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இதையறிந்த வாடிக்கையாளர் குளிர்பான பாட்டிலில் போட்டுள்ள MRP யை விட கூடுதல் விலைக்கு ஏன் விற்கிறீர்கள் என கடைக்காரரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது MRP விலையைவிட அதிகமாக ஏன் பில் போட்டுள்ளீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வாடிக்கையாளர். அப்போது கூலிங் ஏற்று வதால் கூடுதலாக 5 ரூ வாங்க தா செய்வோம்… கரண்ட் பில் யாரு கட்டுவா? போ…போ… என வாடிக்கையாளரை கடைக்காரர் ஒருமையில் பேசி வாடிக்கையாளருக்கு உரிய மரியாதை அளிக்காமல் உதாசீனப்படுத்தினார். தொடர்ந்து வாடிக்கையாளருடன் உடன் வந்த நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குளிர்பான பாட்டிலுக்கென நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்ததற்கும், வாடிக்கையாளரிடம் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளாமல் அலட்சியப் போக்கில் செயல்பட்ட கடைக்காரர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டவிதிகளின் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு உரிய இழப்பீட்டுத் பெற்றுத்தர நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு த்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர்பானங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் புகார் தெரிவிப்பது எப்படி?

கோடைக்காலங்களில் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்தால், LMCTS என்ற மொபைல் ஆப் மூலம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை தொழிலாளர் ஆணையர் அறிவுரையின்படி, 2009ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமுறை எடையளவு அதிகாரிகளால் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான ஆண்டிற்கு எடையளவுகளை முத்திரையிட தவறியவர்கள், எடை குறைவுகள் என 647 முரண்பாடுகள் மற்றும் பொட்டலப் பொருட்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நிறுவனங்கள் உரிய அறிவிப்புகள் இல்லாத பொட்டல பொருட்கள் என 109 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சட்டமுறை எடையவு சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் எடையளவுகளை குறித்த காலத்திற்குள் மறுமுத்திரையிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 2011ம் ஆண்டு சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் உரிய அறிவிப்புகள் உள்ள பொட்டலப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யுமாறும், கோடைக்காலங்களில் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.மேலும், அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், LMCTS என்ற மொபைல் ஆப் மூலம் புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.நுகர்வோர்கள் தங்கள் மொபைலில், LMCTS மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.