நடிகர் விஜய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு… கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை!

கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவையை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் 49 வது பிறந்த தினத்தை ஒட்டி கன்னியாகுமரி பேரூர் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவையின் துவக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு பேரூராட்சிக்கு மூன்று ஆட்டோக்கள் மற்றும் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ஆட்டோ என மொத்தம் 40 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வருடம் முழுதும் ஏழை எளிய கர்ப்பிணி பெண்கள் தங்களின் மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை பயன்படுத்தி கொள்ளும் விதமாக கிராமப்புற செவிலியர்களின் உதவியுடன் இந்த இலவச ஆட்டோ சேவையை செயல்படுத்த உள்ளதாகவும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் இது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவது சிறப்பு என சமூக ஆர்வலர்கள், பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!