கோவையை கலக்கும் பெண் பஸ் டிரைவர் சர்மிளா! திடீரென சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்த வானதி சீனிவாசன்…

கோவையை கலக்கும் பெண் பஸ் டிரைவர் சர்மிளா… திடீரென சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்த வானதி சீனிவாசன்…

கோவையில் தனியார் பேருந்தை இயக்கும் இளம்பெண் ஒட்டுனர் சர்மிளாவை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் சந்தித்து, அவருடன் தனியார் பேருந்தில் சிறிதுதூரம் பயணித்து அவரை உற்சாகப்படுத்தினார். கோவையைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் சர்மிளா தனியார் பேருந்தை இயக்கி வருவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து அந்த ஓட்டுனர் சர்மிளாவுடன் பேருந்தில் பயணித்தார்.

பேருந்து ஓட்டுனர் சர்மிளாவிற்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய வானதி சீனிவாசன், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் அவருடன் பேசியபடி பயணித்தார். அப்பொழுது பேட்டியளித்த வானதி சீனிவாசன், முதல் பெண் பஸ் டிரைவராக சர்மிளா இருப்பது மகிழ்ச்சி அளக்கின்றது எனவும், பெண்கள் இதுவரை கால் பதிக்காத துறையில் நுழையும் பொழுது நிறைய சங்கடங்கள் பிரச்னைகள் இருக்கும் எனவும், அதையும் தாண்டி நமது நாட்டில் இது போன்று வரும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அந்த வகையில் எம்.எல்.ஏ என்ற முறையில் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். மேலும் கல்லூரி படிக்கும் பொழுது இரண்டு பேருந்துகளில் மாறி சென்ற ஞாபகங்கள் வந்து செல்கின்றது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.இது குறித்து பெண் ஓட்டுனர் சர்மிளா கூறுகையில், “வானதி சீனிவாசன் திடீரென பேருந்தில் தன்னை சந்திக்க வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். நிறைய அறிவுரைகள் வழங்கி சென்றதாகவும் அவர் தன்னை சந்திக்க வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்” அவர் தெரிவி

த்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!