இதெல்லாம் ஒரு ROAD-ஆ… சாலையில் காரை நிறுத்தி அதிகாரிகளை கண்டித்த கலெக்டர்-குவியும் பாராட்டுகள்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முதல் குலசேகரன்கோட்டை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்க நபார்டு வங்கி உதவியுடன் ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டனர்.
அப்போது அங்கு ஆய்வுப்பணிக்காக வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனது காரை நிறுத்தி சாலையை ஆய்வு செய்ததில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதை அறிந்து அதிகாரிகளை கண்டித்தார்.
புதிதாக போடப்பட்ட சாலை சரியில்லை எனவும் எனது வாகனம் வந்தாலே சாலை சேதமாகிவிடும் போல dis qualified Road என அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கண்டித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். புதிதாக பொறுப்பேற்று ஆய்வுப் பணி மேற்கொண்டு சாலையை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது
என அதிகாரியை கண்டித்த செயல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது மேலும் அவர் இதுபோன்று மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைகளை களைய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.