
இந்தியாவில் விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவைகளுக்கு இந்த ஓய்வூதியமானது கிடைக்கிறது. விதவைப் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு அவர்களுக்கு 25 வயது ஆகும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை அந்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 65 வயது வரை மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் 1,500 ரூபாய் வழங்கப்படும் நிலையில், 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 4500 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விதவைப் பெண்கள் சமூக நலத்துறைக்கு சென்று விதவை ஓய்வூதிய திட்டத்திற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும். உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்த பிறகு மாதாந்திர ஓய்வூதியம் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.