வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டாரா? – உலக நாடுகளை குழப்பும் காரணம் என்ன…?

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டாரா? – உலக நாடுகளை குழப்பும் காரணம் என்ன…?

வடகொரியாவின் தலைமை பொறுப்புகளை அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் நிர்வகித்து வரும் நிலையில் அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீப காலமாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றும், அவர் மன உளைச்சலால் பதவியை அவரது சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேசிய முன்னாள் தென்கொரிய ஜனாதிபதியின் ஆலோசகர் சாங் சோங் மின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன உளைச்சலில் இருந்து கோமா நிலைக்கு போய்விட்டதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

T

அதேசமயம் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளாரா என்பது குறித்து எதுவும் தெரிய வரவில்லை. தற்போது தற்காலிகமாக அவரது சகோதரி கிம் ஜாங் உன்னின் பணிகளை கவனித்து வருவதாக தெரிகிறது என பேசியுள்ளார்.
இந்நிலையில் கிம் யோ ஜாங் விரைவில் அதிகாரப்பூர்வமாக அதிபர் பதவியை அடைய இருப்பதாகவும், அப்போது கிம் ஜாங் உன் இறந்தது பற்றி தெரிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த செய்திகள் குறித்த எந்தவொரு விளக்கத்தையும் வட கொரிய அரசு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!