நிகழ்வுகளின் நிஜங்கள்

மாலத்தீவு நாட்டில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்.

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள் தைத்திருநாளை தமிழர் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

பாரம்பரிய முறையில் பாத்திரங்கள் கழுவ.. பயன்படுத்துவீர் தேங்காய் நார் தேய்ப்பான்.
YAAL COCONUT 🥥 SCURBPAD – +91 9655157226
Advertising

இதை அடுத்து மாலத்தீவு நாட்டில் தமிழர் திருவிழா மாலத்தீவு தமிழ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் வினோ தேவராஜ் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாலத்தீவு இந்திய கலாச்சார மைய இயக்குனர் சையது தன்வீர் நஸ்ரின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்,நேபால் பூட்டான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நண்பர்களும் கலந்து கொண்டு ரசித்தனர்.

இவ்விழாவில் கால்பந்து போட்டி,
வடம் இழுக்கும் போட்டி, உறியடிக்கும் போட்டி, சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சமத்துவ பொங்கல் விநியோகிக்கப்பட்டது.

மேலும் கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் கடந்த ஆண்டு சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை ராயல் டைகர் ஸ்போர்ட்ஸ் & சர்வீஸ் அணி உறுப்பினர்கள் இணைந்து நடத்தினார்கள்.

இந்த விழா உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, உலகத் தமிழ் அமைப்புகள் மற்றும் தலைவர்கள், தமிழ் பற்றாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள வாட்ஸ்அப் லிங்கை கிளிக் செய்து குழுவில் இணையவும்.

https://chat.whatsapp.com/EfeFiqBJDPC4rocEH6dm4S

Exit mobile version