
ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால் விற்காமல் போன பீர் மதுபானத்தில் இருந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிவாயு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு பின்னர் பீர் மதுபானம் விற்பனை முற்றிலும் நின்று போனது.
இந்நிலையில் வீணான பீர் மதுபானத்தை தரையில் கொட்டி அழிக்காமல் வீடுகளுக்கு தேவையான சமையல் எரிவாயுவாக மாற்றும் திட்டம் அடிலைடில் தொடங்கியது.
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் காலாவதியான பீர் மதுபானத்தை, எரிவாயு உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு மூலப்பொருளாக அனுப்பப்பட்டது.
வியக்க வைக்கும் வகையில் வழக்கமாக இருக்கும் எரிவாயு உற்பத்தியை விட பீர் மதுபானம் மூலம் (ஆயிரத்து இருநூறு) 1200 வீடுகளுக்கு தேவையான எரிவாயு தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.