புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களிடம் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
மதுரை மாவட்டத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களிடம் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
முற்றுகைப் போராட்டம்:
உசிலம்பட்டி அருகே கல்லூத்து ஊராட்சிக்கு உட்பட்ட கல்யாணி பட்டி கிராமத்தில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் மதுபானக் கடை அமைய உள்ள பகுதியில் விவசாய நிலங்கள், மகாலிங்கம் கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளன எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க கூடாது என நாம் தமிழர் கட்சியினரும் கிராம மக்களும் கடை அமைய உள்ள இடத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை:
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன் அவர்களும் பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட கவுன்சிலர் ரெட் கிராஸ் ஆகியோர் விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த உத்தப்ப நாயக்கனூர் காவல்துறையினர, மதுக்கடை அமைப்பதை தடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் அவர்கள் கூறியதாவது:
கிராம மக்களோடு நாம் தமிழர் கட்சி சகோதரர்கள் போராடி வருகிறார்கள் அவர்களோடு சேர்ந்து நானும் எதிர்ப்பேன். பொதுமக்களின் மீறி இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை வந்தால் நாங்கள் கடுமையாக போராடத் தயாராக உள்ளோம். அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுபானக் கடை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே 525 வாக்குறுதிகளில் ஒரே கையெழுத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை முடிவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள்.
ஆனால் இன்று அப்படி அல்ல ஈசல் புற்று போல கிராம புறங்களில் நிறைய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த கல்யாணபட்டி கிராமத்தில் கண்டிப்பாக டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்க கூடாதென்றும், மீறி திறந்தால் கடுமையாக போராடுவோம், திமுக ஆட்சியில் 90 சதவிகிதம் தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று தவறாக கூறிக்கொண்டுவருகிறார்கள். ஓபிஎஸ்-யிடம் அனுமதி பெற்று புதிதாக திறக்கட்டடவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை மூடப் போராடுவோம் என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.