தைப்பூச திருவிழா: திருப்பூரில் நாளை வேல் வழிபாடு! வீரத்தமிழர் முன்னணி ஏற்பாடு

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் தான் ‘வீரத் தமிழர் முன்னணி’-யை சில ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் ஆரம்பித்தார். தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் நமது முப்பாட்டன் என்பது நாம் தமிழர் கட்சியின் மெய்யியல் நிலைப்பாடு. இதனால் திருமுருகப் பெருவிழாவை அக்கட்சியின் மெய்யியல் பிரிவான வீரத் தமிழர் முன்னணி நடத்தி வருகிறது. அந்தவகையில் முதல் விழாவாக அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடாக திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்து உள்ள பழனி முருகன் கோயிலில் திருமுருகப்பெருவிழா கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க: கூட்டணிக் கட்சியால் குழப்பம் – அடுத்தடுத்து மாற்றப்பட்ட அதிமுக பேனர்..! காரணம் என்ன..?

அதனைத் தொடர்ந்து அறுபடைவீடுகளில் ஐந்தாம் படை வீடான திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்து உள்ள திருத்தனி முருகன் கோயில், அறுபடைவீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அறுபடைவீடு வீடுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்து உள்ள இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில், நான்காவது படை வீடுகளில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோனம் வட்டத்தில் உள்ள சுவாமிமலை, ஏழாம் படை வீடு என போற்றப்பட்டு வரும் கோயம்புத்தூர் மாநகரில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்து உள்ள திருப்போரூர் முருகன் கோயில், உள்ளிட்ட கோயில்களில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து எட்டாவது ஆண்டு திருமுருகப்பெருவிழா இந்த முறை, ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் திண்டல் மலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ளது இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் கலந்துகொண்டு அறிய பல கருத்துக்களை பேசவுள்ளார்கள் என வீரத்தமிழர் முன்னணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரோட்டில் திருமுருகப் பெருவிழா

இதற்கிடையே திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாகை தைப்பூச விழாவான நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு வீரத்தமிழர் முன்னணி நடத்தும் “12”ஆம் ஆண்டு திருமுருகப் பெருவிழா முருகன் சிலை வைத்து மற்றும் வேல் வைத்து வழிபாடு நிகழ்வு மற்றும் திருவாசகம், தேவாரம், முற்றோதுதலுடன் தொடங்கி நடைபெற உள்ளது. சரியாக 1மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!