கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கப்படவில்லை.
ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக மாதம்தோறும் பௌர்ணமி நாளன்று திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் முழுநிலவு வழிபாடு நடைபெற்று “நிலாச்சோறு” அன்னதானம் நடைபெறுவது வழக்கம்.
ஐந்து மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தமிழகம் முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில்
1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கோயில் அருகே ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் பக்தர்களுக்கு “நிலாச்சோறு” அன்னதானம் வழங்கப்பட்டது.