
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆட்டோ விபத்தில் பலியான முள்ளிப்பள்ளம் ராணுவ வீரரின் உடல் மதுரை வந்தடைந்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் நாகரத்தினம் (வயது 28) இவர் ராஜஸ்தான் (டெல்லி ) ஆறாவது கார்டு ரெஜிமென்ட் படை பிரிவில் லேன்ஸ் நாயக்காக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அலுவல் பணி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூருக்கு ஆட்டோவில் சென்றபோது ம ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் நாகரத்தினம் சம்பவ இடத்திலே பலியானார் –
. அதனைத் தொடர்ந்து அவரது உடல் அஞ்சலி செலுத்தப்பட்டு சொந்த ஊரான முள்ளிப் பள்ளம் கிராமத்திற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் நவரத்தினம் உடலை மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மற்றும் ஆறாவது கார்டு படைப்பிரிவு ராணுவ வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடலை பெற்றுக் கொண்டு முள்ளிப் பள்ளம் சென்றனர் .
அங்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.