தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு 16 மெட்ரிக்-டன் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் மூலம் தினசரி வீடுகளில் இருந்து வாங்கப்படுகிறது.
இதனை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 6 பசுமை நுண் உரக்குழிகள் மூலம் இயற்கை உரமாக உருவாக்கப்படுகிறது.
அந்த உரங்களை கிலோவிற்கு ரூபாய் ஒன்று வீதம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இவ்வாறு 2020 ஆம் ஆண்டு விற்பனையான 58,500 ரூபாய் தொகையை 195 துப்புரவு பணியாளர்களுக்கு தலா 300 வீதம் ரொக்கமாக பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார அலுவலர் நாராயணன் தலைமை தாங்கினார். இளநிலைப்பொறியாளர் முரளி, நகரமைப்பு அலுவலர் காஜாமுகைதீன், ஆய்வாளர் கிருஷ்ண குமார் ,துப்பரவு ஆய்வாளர் சேகர் முன்னிலை வகித்தனர். துப்பரவு ஆய்வாளர் ,மாரிச்சாமி வரவேற்புரையாற்றினார்.
மேலும் துப்பரவுபணியாளர்களின் பணிகளை பாராட்டி அவர்களை ஊக்கு விக்கும் விதமாக ஆணையாளர் குமார்சிங் இயற்கை உரம் விற்ற பணத்தை ரொக்கமாக வழங்கியதோடு பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்கவும், நகராட்சிகளில் தரமான இயற்கை உரம் தயாரிக்கப்படுவதை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 1 வீதம் செலுத்தி பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆணையாளர் குமார்சிங் தெரிவித்தார்..