இராஜபாளையம் மாடசாமி கோயில் தெரு 60 அடி ரோட்டில் குப்பை கிடங்கு அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு நகராட்சி அதிகாரிகள் முற்றுகை – போலீஸ்சார் சமரசம்
இராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு 60 அடி ரோட்டில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பை கிடங்கு செட் அமைப்பதற்கு இராஜபாளையம் நகராட்சி சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடத்தை துப்புரவு செய்யும் பணி தொடக்கப்பட்டது. இததையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துஎதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்தனர். காலங்காலமாக விவசாயிகள் நெல் களமாக பயன்படுத்தி வந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என்றும் மக்கள் மிகுந்த சுகாதார சீர்கேட்டிற்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் நகராட்சி அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டு இருவரும் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.