குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற இடைத்தேர்தல் வர உள்ள நிலையில் காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு பூஜை.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற யோகிராம்சுரத்குமார் மந்திராலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்களில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து பகவானை தரிசித்து செல்வது வழக்கம்.
மேலும் இந்த மந்திராலயத்தில் உலக நன்மைக்காக வேண்டி லோக ஷேம யாகம், மழை வேண்டி வருண யாகம், பொதுமக்கள் நோய் நொடிகளில் இருந்து விடுபட வேண்டி நோய் நொடிகளில் இருந்து விடுபட வேண்டி தன்வந்திரி யாகம் உள்பட பல்வேறு யாகங்களும், பலவகையான பூஜைகளும் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகளால் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் விரைவில் பாராளுமன்ற இடைத் தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜக சார்பில் போட்டியிட இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென காணிமடம் மந்திர் ஆலயத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு பொன் காமராஜ் சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார் எம்.பி முதலில் இங்கு வந்துதான் சிறப்பு பூஜைகள் செய்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.