தமிழ் மொழி மீட்பு போராளி ம.பொ.சி நினைவுநாள் – சீமான் மாலை அணிவித்து மரியாதை.

சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 03-10-2022
காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜார், தியாகராய சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.

தமிழ்மொழி மீட்புப் போராளி’ ம.பொ.சிவஞானம் நினைவுநாள் இன்று 03.10.1995

வடமொழியின்பால் தீராப்பகைமை கொண்டவர் போல் நடிக்கும் இவர்கள் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்கின்றனர். ‘த்ராவிடம்’ என்பது வடமொழிச் சொல்லாகும். இதோ, ரெவரண்டு ராபர்ட் கால்டுவெல் டி.டி.எல்.எல்.டி. கூறுவதைக் கேளுங்கள்: “வடமொழியில் தென்னிந்திய மொழியினத்தைக் குறிப்பதற்குப் பண்டை நாளில் வழங்கப்பட்டதாகத் தெரியக்கிடப்பது ‘ஆந்திர- திராவிட பாஷா’ என்ற சொற்றொடரேயாம். ‘தெலுங்கு- தமிழ்மொழி’ என்பது அச்சொற் தொடரால் போந்த பொருள்… சிறந்த வடமொழி வாணரான குமாரில பட்டர் என்பார் இச்சொற்றொடரை முதன்முதலாக எடுத்தாண்டுள்ளார்.” ” மனு ஸ்மிருதியில் ‘திராவிடம்’ என்ற சொல் ஏனைய தென்னிந்திய மக்கள் அனைவரையும் குறித்து நிற்பது… பெறப்படும். இனி, ஸ்மிருதி காலத்திற்குப் பின்னர் வந்த மொழி யாராய்ச்சியாளர்களும் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தென்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர்.” “பாகத மொழித் தொகுதியில் ‘திராவிடி’ என்னும் பெயரால் திராவிட மொழியினம் சேர்க்கப்பட்டுள்ளது.” “வடமொழி மூல நூல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்ட ஜே.மூர் என்னும் பேராசிரியர், “சமஸ்கிருத மூலங்கள்” என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள் ஒன்றில் ‘திராவிடம்’ என்பது ‘விபாஷை’ (சிறுபாகதம்) என்று வடமொழி வாணர் ஒருவரால் குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வடமொழி வாணர் திராவிடர்களுடைய மொழி ‘திராவிடி’ என்று கூறியுள்ளார்.” “பண்டை நாட்களில் வட நாட்டவரால் ‘திராவிட மொழிகள்’ என்று குறிக்கப்பட்டது.” இவை, ‘கால்டுவெல் ஒப்பிலக்கணம்’ என்ற நூலிலிருந்து தொகுக்கப் பட்டவையாகும். அந்நூலை, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மேற்காட்டிய சான்றுகளால் ‘திராவிடம்’ என்னும் சொல் சங்க இலக்கியங்களிலோ தனித்தமிழ் நூல்களிலோ இல்லாத ஒன்றென்பதும் வடமொழியாளர் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நிலத்துக்கும் வைத்த இரவற் பெயர் என்பதும் நன்கு விளங்கும்.

நன்றி: ம.பொ.சி. எழுதிய ‘தமிழும் கலப்படமும்’ நூலிலிருந்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!