கோபுரம் ஏறுகிறது தமிழ்..! சாதித்து காட்டிய நாம் தமிழர் கட்சி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு.

தஞ்சை குடமுழுக்கில் தமிழ் மொழியை கோபுரம் ஏறச் செய்து தமிழை ஓங்கி ஒலிக்கச்செய்து மொழி மீட்சியையும், பண்பாட்டு மீட்டெடுப்பையும் நிகழ்த்திக்காட்டியது நாம் தமிழர் கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகமெங்கும் இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்குச் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வீரத்தமிழர் முன்னணியின் சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கரூர் ஆநிலையப்பர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணி தொடுத்த வழக்கில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் இனி கண்டிப்பாகத் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்டு மதுரை உயர் நீதிமன்றக்கிளை தீர்ப்பு வழங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

ஏற்கனவே, அரசருக்கரசன் பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குத் தமிழில் நடைபெறவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி சட்டப்போராட்டம் நடத்தி, தஞ்சை குடமுழக்கில் தமிழை ஓங்கி ஒலிக்கச்செய்து மொழி மீட்சியையும், பண்பாட்டு மீட்டெடுப்பையும் நிகழ்த்திக்காட்டியது. அன்று தமிழன்னைக்குச் சாற்றிய மணிமகுடத்தில் மேலும் வைரக்கற்கள் பதித்தது போல, கரூர் ஆநிலையப்பர் கோயிலில் நடைப்பெற்ற குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டுமென்று, வீரத்தமிழர் முன்னணி சார்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் இக்கோயில் குடமுழுக்கு மட்டுமின்றி, இனி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அனைத்துக் குடமுழுக்குகளும் உறுதியாகத் தமிழில் நடத்தப்படும் வேண்டுமென்றும், அவ்வாறு தமிழில் குடமுழுக்கு நடத்தப்படாவிட்டால் ரூபாய் 10 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதியரசர்கள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கி நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இது வீரத்தமிழர் முன்னணியின் சட்டப்போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். இதன் மூலம், பன்னெடுங்காலமாக நம்முடைய வழிபாட்டுத்தலங்களை விட்டு அகற்றப்பட்டிருந்த அன்னைத்தமிழை மீண்டும் வீரத்தமிழர் முன்னணி கோபுரமேற்றி வரலாற்றுப் பெரும்புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது” என்று கூறினார்.

இது போன்ற செய்திகைளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து குழுவில் இணையவும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!