மதுரை மாவட்டம் திருமங்கலம்அருகே கோவையிலிருந்து சிவகாசி நோக்கி சென்ற அரசு பேருந்து விருதுநகர் நான்கு வழி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவையிலிருந்து சிவகாசி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்தை தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார்.
திருமங்கலத்தை அடுத்த ராயபாளையம் விலக்கு அருகே பேருந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த பேருந்தின் டிரைவர் சிவக்குமார்(44) பயணிகள் மதுரை கீழவாசல் பகுதியை சேர்ந்த கோபிநாத், சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் மாரீஸ்வரி உள்ளிட்ட 4 பயணிகள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.