வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
போராடி வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் மற்றும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…

“உழவர் குடிகள் வாழாது – உலக குடிகள் வாழ இயலாது”
“கண்டிக்கின்றோம்..கண்டிக்கின்றோம் புதிய வேளாண் கொள்கையை கண்டிக்கின்றோம்”
“கொல்லாதே கொல்லாதே மோடி அரரே.. விவசாயிகளை கொள்ளாதே..”
“தரகர்கள் ஜாக்கிரதை” என பதாகைகள் ஏந்தி கோசங்கள் எழுப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ. வெற்றிக்குமரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி மண்டல செயலாளர் செங்கண்ணன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மாநில கொள்கைபரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன் மாநில இளைஞர் பாசறை செயலாளர் துருவன் செல்வமணி உப்பட மதுரை மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸப் குழுவில் இணையவும்.
