புத்தாண்டு 2021 பிறந்துள்ள நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள 1971ல் உள்ள தேதிகளும் நாட்களும் ஒன்றுபோல் உள்ள அதிசயம் நடந்துள்ளது.
மனித வாழ்க்கை சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல் என
சாமானியர்கள் முதல்
செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது.
மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரையும் பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் வேலையிழப்பிலும் அவதிப்பட்டனர். தொழில்கள் முடங்கியதாலும், வேலைவாய்ப்புகள் குறைந்ததாலும், பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு தொழில் நிறுவனங்களும், நாடுகளும் பொருளாதாரத்தில் முடங்கிப் போயின.
இந்த நிலையில் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு ஆறுதலான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாகஉள்ளது. இதற்கிடையே 2021ம் ஆண்டு காலண்டர் தேதி 1971 வருட தேதி ஒன்றாக உள்ளதால் இந்த ஆண்டு அதிசய ஆண்டாக அமைந்துள்ளது.