கன்னியாகுமரி அருகே வாகை பதியில் ஒரு குடைக்குள் என்ற தலைப்பில் அய்யா வைகுண்டரின் வரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்த திரைப்படத் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.
ஸ்ரீமன் நாராயண பெருமாளின் அவதாரமான வைகுண்டர் குறித்து பல்வேறு தரப்பினர் ஏராளமான திரைப்படங்கள், நாடகங்கள் எடுத்து அவரது அருளை பரப்பி வருகின்றார். அந்த வகையில் கே.எல் உதயகுமார் என்ற இயக்குனரின் பார்வையில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து ஒரு குடைக்குள் என்ற தலைப்பில் திரைப்படம் எடுத்து அதனை வெளியிட முடிவு செய்துள்ளார். அதன் படப்பிடிப்புகள் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள பதிகளில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஆமணக்கன் விளை வாகை பதியில் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து ஐயா பிறந்த நாளான மார்ச் மாதம் 4 ஆம் தேதி திரைப்படம் திரைக்கு வருகிறது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேனிசைத் தென்றல் தேவா இசை அமைக்க இணைத் தயாரிப்பாளர் பொன் செல்வராஜ் படத்தை தயாரித்துள்ளார்.ஒரு குடைக்குள் திரைப்படத்தின் காட்சி குறித்து நடிகைக்கு இயக்குனர் விளக்குகிறார்.