மதுரை; வைகையில் பனி மலை போல் நுரை பொங்கியதால் பொது மக்கள் அச்சம்..

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இரவு முழுவதிலும் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் மழை நீர் வர தொடங்கியது. இதையடுத்து மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பிய நிலையில் தண்ணீர் செல்ல வேண்டிய பகுதியில் முழுவதிலுமாக ஆகாயதாமரை செடிகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் தண்ணீர் நிரம்பி தரைப்பாலத்தில் தண்ணீர் ஓட தொடங்கியுள்ளது.

மேலும் தடுப்பணையில் உள்ள நீரில் முழுவதிலுமாக நுரை பொங்கி பனிமலை போல் காட்சியளிப்பதோடு, வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் நுரையுடன் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பு பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தபட்டவரும் நிலையில் மீண்டும் சாக்கடை நீர் வைகையாற்றில் கலப்பதால் நுரை பொங்குகிறதா இல்லையெனில் ரசாயனம் ஏதும் கலந்து நுரை பொங்குகிறதா என நீர்நிலை ஆர்வலர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மழை பெய்துவரும் நிலையில் வைகை ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

One thought on “மதுரை; வைகையில் பனி மலை போல் நுரை பொங்கியதால் பொது மக்கள் அச்சம்..

Leave a Reply

error: Content is protected !!