மனவளர்சி குன்றியவர்களை ஆட்டோடிரைவர் ஒருவர் பராமரித்து வருகிறார்.
நாகர்கோவிலை சேர்ந்த ஆட்டோடிரைவர் ராஜன்.இவர் மனவளர்ச்சி குன்றியவர்களை பாமரித்தும் , வீடற்ற ஏழைகளுக்கு தினமும் ஒருவேளை உணவு வழங்கும் திட்டத்தை ஹரிக்கேன் வெட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த டிசம்பர் மாதம் நாகர்கோவிலில் தொடங்கினார். தற்பொழுது இந்த திட்டம் கன்னியாகுமரிக்கும் விரிவாக்கம் செய்து செயலாற்றுகிறது. கொரோனா காலத்திலும் சேவையை தொடர்ந்த
ஆட்டோ டிரைவர் ராஜனின் தன்னலமற்ற சேவையை பாராட்டி ஆட்டோ டிரைவர் ராஜனுக்கு கன்னியாக்குமரி டிஎஸ்பி பாஸ்கரன் செக் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை டாக்டர்கள் கிறிஸ்டோ பால் ராய், சகாய பிரதாப் ஃபாங்ளன், பத்மகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.