வாழைத்தார் ஏற்றி செல்லும் வாகன கட்டணம் உயர்வு

டோல்கேட் கட்டணம், மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக வாழைத்தார் ஏற்றி செல்லும் வாகன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இலகுரக வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை : தூத்துக்குடி மாவட்டம், செபத்தையாபுரம் ஏரல் ஆத்தூர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து வாழைத்தார் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு வாடகை போதுமானதாக இல்லாத காரணத்தினால் டீசல் விலை உயர்வு மற்றும் டோல்கேட் கட்டண உயர்வு மற்றும் வாகன உதிரிபாகங்கள் விலை உயர்வாக கணக்கிட்டு 7 டன் வாகனத்திற்க்கு வாடகை கட்டணம் உயர்த்தபட்டுள்ளது.

சென்னை கோயம்பேடுக்கு ரூ.16000லிருந்து ரூ.18000 ஆகவும், பாண்டிச்சேரிக்கு ரூ.14500லிருந்து ரூ.16000 ஆகவும், கடலூர் ரூ.14500க்கு ரூ.16000 ஆகவும், திண்டிவனத்திற்கு ரூ.15000லிருந்து ரூ.16000ஆவும், கோயமுத்தூருக்கு ரூ.10000லிருந்து ரூ.12000 ஆகவும், கேரளா பாலகாடுக்கு ரூ.15000லிருந்து ரூ.16000 ஆகவும், மலப்புரம் ரூ.17500லிருந்து ரூ.19000 ஆகவும், கோழிக்கோடுக்கு ரூ.20000லிருந்து ரூ.22000 ஆகவும் திருச்சூர் ரூ.17000லிருந்து ரூ.18000 ஆகவும் பாவூரொட்டி குருவாயூருக்கு ரூ.19000லிருந்து ரூ.20000 ஆகவும், பெருந்தலமன்னா ரூ.21000லிருந்து ரூ.22000 ஆகவும், காசர்கோடுக்கு ரூ.27000லிருந்து ரூ.30000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!