திருப்பூர் மாவட்டம் ஈஸ்வரமூர்த்தி லே அவுட் பகுதியில், மாநகராட்சி சார்பில், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டு, டேங்க் ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர், அதனை துவக்கி வைத்தார். அப்போது, அந்த டேங்கில், திட்ட மதிப்பீடு ரூபாய் 7.70 லட்சம் என்று எழுதப்பட்டிருந்தது.
இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த எம்.எல்.ஏ குணசேகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை எம்.எல்.ஏ என்ற முறையில் திறந்து வைத்ததாகவும் அங்கு செய்யப்பட்ட மொத்த பணிகளின் செலவு தான் 7.70 லட்சம் எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் செலவுக்கணக்கையும் வெளியிட்டுள்ளார்.
அந்த செலவுக்கணக்கின் விவரம் பின்வருமாறு:-
