மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் அனுஷ் டைல்ஸ் ஷோரூம் எதிரே குறுகிய சாலை உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இன்று அதே இடத்தில் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குறுகிய சாலையோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதிய போது அனுஜ் டைல்ஸ் கம்பெனியில் இருந்து வெளியே வந்த வாடிக்கையாளர் ஒருவர் மீது பஸ் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிேலே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மதுரையிலிருந்து தென்மாவட்டங்கள் செல்லக் கூடிய பிரதான சாலையாக இந்த சாலை விளங்குகிறது.
ஆனால் இந்த விபத்து நடந்த இடத்தில் சாலை மிக குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலையோரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி குறுகிய சாலை பகுதியை விரிவாக்கம் செய்த போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சாலை அமைத்து தரவேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.