
காஷ்மீர் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் – மதுரை செல்லக்கூடிய NH-7 நான்குவழிச்சாலையில் கூத்தியார்குண்டு சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 2020 அக்டோபர் மாதம் மின்விளக்கு மீது லாரி மோதியதில் விளக்கு அமைக்கப்பட்ட பீடம் சேதமடைந்து, மின்கம்பம் கீழே விழும் நிலையில் இருந்தது.

அதை அப்புறப்படுத்தி நான்குவழிச் சாலை நிர்வாகத்தினர் சாலை ஓரத்தில் வைத்தனர். அந்த மின்கம் சீரமைக்கப்படாமல் 2 வருடத்திற்கு மேலாக புதருக்குள் மண்டிக்கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகள் ஆன பின்பும் உயர்கோபுர மின்விளக்கு பொருத்தப்படாததால் அப்பகுதி இரவின் இருளில் மூழ்கியுள்ளது. கூத்தியார்குண்டு முதல் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வரை நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளதால்

கப்பலூர் சிட்கோ தொழிலாளர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் பிராதானமாக விளங்கும் கூத்தியார்குண்டு சந்திப்பை கடந்து செல்லும் வாகனங்களும், பாதசாரிகளும் சாலையை கடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் பேரபாயம் உள்ளது.
பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிர்வாகத்தினர் மெத்தனப் போக்கில் செயல்படுவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கை மீண்டும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.